Saturday, August 7, 2010

உள்ளங்கள் அமைதி பெறட்டும்

أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْفَقْرِ، وَالْقِلَّةِ، وَالذِّلَّةِ، وَأَعُوْذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَم



இறைவா! வறுமை, ஏழ்மை, இழிவு ஆகியவற்றை விட்டும் நான் பிறருக்கு அநீதம் செய்வதை விட்டும் பிறரின் அநீதிக்கு ஆளாவதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன்.



أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ التَّرَدِّيْ، وَالْهَدْمِ، وَالْغَرَقِ وَالْحَرَقِ، وَأَعُوْذُ بِكَ أَنْ يَتَخَـبَّطَنِيَ الشَّـيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَعُوْذُ بِكَ أَنْ أَمُوْتَ فِيْ سَبِـيْلِكَ مُدْبِرًا، وَأَعُوْذُ بِكَ أَنْ أَمُوْتَ لَدِيْغًا


யாஅல்லாஹ்! உயரத்திலிருந்து கீழே விழுந்தோ, இடிந்து விழுந்தோ, மூழ்கியோ, எரிந்தோ இறப்பதை விட்டும், மரண நேரத்தில் ஷைத்தான் என்னை தீண்டுவதை விட்டும், உன்னுடைய பாதையில் (போர் செய்யும்போது) புறமுதுகு காட்டிஓடி இறப்பதை விட்டும், (விஷ ஜந்துக்களால்) கொட்டப்பட்டு இறப்பதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ------------------------------------------நஸயி



اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَيْرَ الْمَسْأَلَةِ، وَخَيْرَ الدُّعَاءِ، وَخَيْرَ النَّجَاحِ، وَخَيْرَ الْعَمَلِ، وَخَيْرَ الثَّوَابِ، وَخَيْرَ الْحَيَاةِ، وَخَيْرَ الْمَمَاتِ، وَثَـبِّـتْـنِيْ، وَثَقِّلْ مَوَازِيْنِيْ، وَحَقِّقْ إِيْمَاِنْي، وَارْفَعْ دَرَجَاتِيْ، وَتَقَـبَّلْ صَلاَتِيْ، وَاغْفِرْ خَطِيْئَتِيْ، وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلَي مِنَ الْجَنَّةِ، أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ فَوَاتِحَ الْخَيْرِ،وَخَوَاتِمَهُ،وَجَوَامِعَهُ، وَأَوَّلَهُ،وَظَاهِرَهُ،وَبَاطِنَهُ،وَالدَّرَجَاتِ الْعُلَي مِنَ الْجَنَّةِ آمِيْنَ

أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَيْرَ مَا آتِيْ، وَخَيْرَ مَا أَفْعَلُ، وَخَيْرَ مَا أَعْمَلُ، وَخَيْرَ مَابَطَنَ، وَخَيْرَ مَا ظَهَرَ، وَالدَّرَجاَتِ الْعُلَي مِنَ الْجَنَّةِ آمِيْنَ

أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ أَنْ تَرْفَعَ ذِكْرِيْ، وَتَضَعَ وِزْرِيْ، وَتُصْلِحَ أَمْرِيْ، وَتُطَهِّرْ قَلْبِيْ، وَتُحَصِّنَ فَرْجِيْ، وَتُنَوِّرَقَلْبِيْ، وَتَغْفِرَ لِيْ ذَنْبِيْ، وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلَي مِنَ الْجَنَّةِ آمِيْنَ

أَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ أَنْ تُبَارِكَ فِيْ نَفْسِيْ، وَفِيْ سَمْعِيْ، وَفِيْ بَصَرِيْ، وَفِيْ رُوْحِيْ، وَفِيْ خَلْقِيْ، وَفِيْ خُلُقِيْ، وَفِيْ أَهْلِيْ، وَفِيْ مَحْيَايَ، وَفِيْ مَمَاتِيْ، وَفِيْ عَمَلِيْ، فَتَقَبَّلْ حَسَنَاتِيْ، وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلَى مِنَ الْجَنَّةِ آمِيْنَ


பொருள்: யாஅல்லாஹ்! நல்ல வேண்டுதல், நல்ல பிரார்த்தனை, நல்ல வெற்றி, நற்செயல், நற்கூலி, நல்வாழ்வு, நல்ல மரணம் ஆகியவற்றை நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். என்னை நீ உறுதிப்படுத்துவாயாக! (மறுமை நாளில்) என்னுடைய தராசைக் கனப்படுத்துவாயாக! என்னுடைய ஈமானை பலப்படுத்துவாயாக! என்னுடைய அந்தஸ்தை உயர்த்துவாயாக! என்னுடைய தொழுகையை ஏற்றுக்கொள்வாயாக! என்னுடைய தவறுகளை மன்னிப்பாயாக! மேலும் நான் உன்னிடம் சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்த்தைக் கேட்கிறேன்.
யாஅல்லாஹ்! நல்ல வெற்றிகளையும், நல்லமுடிவுகளையும், அனைத்து நல்லவைகளையும் நல்ல துவக்கத்தையும் வெளிப்படையான, அந்தரங்கமான நல்லறங்களையும் சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துகளையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். ஏற்றுக் கொள்வாயாக!

யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் நல்லவற்றில் ஈடுபடவும், நல்லவற்றைத் தூண்டவும், நல்லவற்றைசெய்யவும், அந்தரங்கம் மற்றும் வெளிப்படையான அனைத்து நல்லவைகளையும் சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துகளையும் கேட்கிறேன். ஏற்றுக் கொள்வாயாக!

யாஅல்லாஹ்! நான் செய்யும் திக்ரை உயர்த்துமாறும் என்னுடைய பாவத்தை மன்னிக்குமாறும் என்னுடைய பிரச்சனைகளை சீராக்குமாறும் என்னுடைய உள்ளத்தை தூய்மைப்படுத்துமாறும் என்னுடைய மர்மஸ்தானத்தை பத்தினித்தனமாக ஆக்குமாறும் என்னுடைய உள்ளத்தை ஒளிமயமாக்குமாறும் என்னுடைய பாவங்களை மன்னிக்குமாறும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துகளையும் கேட்கிறேன்.

யாஅல்லாஹ்! என்னுடைய உள்ளம், காது, பார்வை, உயிர், உடல், குணம், குடும்பம், வாழ்வு, மரணம், செயல் ஆகிய வற்றில் நீ அபிவிருத்தி செய்யுமாறு நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் என்னுடைய நல்லறங்களை நீ ஏற்றுக் கொள்வாயாக!. சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துகளைக் கேட்கிறேன். தந்தருள்வாயாக!


ஆதார நூல்: ஹாகிம்.



أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَالْقَسْوَةِ وَالْغَفْلَةِ وَالْعَيْلَةِ وَالذِّلَّةِ وَالْمَسْكَنَةِ وَأَعُوْذُ بِكَ مِنَ الْفَقْرِوَالْكُفْرِ وَالْفُسُوْقِ وَالشِّقَاقِ وَالنِّفَاقِ وَالسُّمْعَةِ وَالرِّيَاءِ وَأَعُوْذُ بِكَ مِنَ الصَّمَمِ وَالْبَكَمِ وَالْجُنُوْنِ وَالْجُذَامِ وَالْبَرَصِ وَسَيِّئِ اْلأَسْقَامِ .



யாஅல்லாஹ்! இயலாமை, சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், முதுமை, கல்நெஞ்சம், பொடுபோக்கு, கஷ்டம், இழிவு, ஏழ்மை ஆகியவைகளை விட்டும் வறுமை, நிராகரித்தல், பாவச்செயல், பிரிவை ஏற்படுத்துதல், நயவஞ்சகத்தனம், பிறர் போற்றவேண்டும் என்பதற்காகச் செயல்படல், பிறர் பார்க்கவேண்டும் என்பதற்காகச் செயல்படல் -முகஸ்த்துதி- ஆகியவைகளை விட்டும், செவிடு, ஊமை, பைத்தியம், உடலுறுப்புக்கள் அழுகி விழும்நோய், வெண் குஷ்டம் மற்றும் கெட்ட அனைத்து நோய்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


ஆதார நூற்கள்: ஹாகிம், பைஹகீ

--
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْإِيْمَانِ وَلاَ تَجْعَلْ فِيْ قُلُوْبِنَا غِلاًّ لِلَّذِيْنَ آمَنُوْا رَبَّنَا إِنَّكَ رَءُوْفٌ رَحِيْمٌ

30. எங்கள் இறைவனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; மிக்க கருணையுடையவன்.
- அல் குர் ஆன்59:10

1 comment: